தொடரும் தோழர்கள்

புதன், நவம்பர் 17, 2010

ராசா என்பார்,மந்திரி என்பார்.....

“தாத்தா!”
”என்னடா பேரா?”
”ஒரு கதை சொல்லு தாத்தா”
“என்ன கதைடா வேணும்?
”ராசா ராணிக்கதை சொல்லு தாத்தா”

”அது வேண்டாண்டா.ராசா மந்திரிக் கதை சொல்றேன்.”
”ராசா கதையிலே ராணி இல்லாம இருக்குமா தாத்தா”
”இந்தக் கதையிலே ராணிக்கு எடமில்லடா.இது ராசா
மந்திரிக் கதைதான்”
”ராசாவும் மந்திரியுமா,தாத்தா?”
”இல்லடா!இந்தக் கதைல ராசாதான் மந்திரி!”
”அப்ப மந்திரி யாரு தாத்தா?”
”மந்திரிதான் ராசா.”
“என்ன தாத்தா கொழப்பறே?”
“அடேய்! இது ராசாங்கற மந்திரி பத்தின கதை”
“ம்”
”அவர் தன்னோட இலாகாவிலே ஊழல் பண்ணிட்டாரு,
அவராலே அரசாங்கத்துக்கு கோடிக் கணக்கில நஷ்டம்னு,
சொல்றாங்க.ஆனா அவரு தான் ஒரு தப்பும் பண்ணலைன்னு
சொல்றாரு.அவரைச் சேந்தவங்க அவர் ஒரு தலித்
அப்படிங்கறதால பழி வாங்கறாங்கன்னு சொல்றாங்க”

”தலித்துன்னா என்ன தாத்தா?”
”உம்.நெறய சாதிப் பிரிவுகள் இருக்குல்ல.இதுவும் ஒண்ணு.
மேல் சாதிக்காரங்க முன்னாலே எல்லாம் இவங்களை
மோசமா நடத்தினாங்களாம்.இப்பவும் தங்களுக்குத்தேவைப்பட்ட நேரத்திலே இத ஆயுதமாக் கையிலே எடுத்துக்கிறாங்க சிலர்.”

”தாத்தா! எங்க கிளாசிலே நாப்பது பேர் இருக்கோம்;எல்லாரும் ஒரே சாதியா?”
“இல்லடா!வெவ்வேறு சாதி இருப்பாங்க”
“அதுல நீங்க சொன்ன தலித்துகளும் இருப்பாங்கல்ல?”
“இருப்பாங்க”
“இதுனால எங்களுக்குள்ள சண்டை எதுவும் வரதில்லையே,தாத்தா!ராபர்ட்,இஸ்மாயில்,சீனிவாசன்,
கருப்பையா எல்லாருமே எனக்கு நல்ல ஃபிரண்ட்ஸ்தான்.”

“நீங்க பெரியவங்க ஆனதும் இப்படி இருக்க முடியாது,இருக்க விடமாட்டாங்க அரசியல் வாதிகள்.”
“அரசியல் வியாதிகளா தாத்தா?”
”தெரியாமச் சொன்னாலும் சரியாத்தான் சொன்னே!”
”அப்ப இந்த ராசாவுக்குப் பதிலா வெறே யாரும் வந்தா எல்லாம் நல்லா ஆயிடுமா?வேறே கட்சிக்காரங்க வந்தா எல்லாம் சரியாயிடுமா தாத்தா?”

”ஊஹூம்.ஊழல் ஏதாவது ரூபத்திலே,ஏதாவது அளவிலே இருந்துக்கிட்டேதான் இருக்கும்.பெருந்தலைவர் சொன்ன வார்த்தையிலே சொல்லணும்னா எல்லாம் ஒரே குட்டையிலே ஊறின மட்டைகள்தான்.”

”இதுக்கு முடிவுதான் என்ன தாத்தா”

”நீங்கதான்.உங்க தலைமுறை வந்துதான் எல்லாம் சரி பண்ணணும்.”

(நம்புவோம்.)

6 கருத்துகள்:

  1. This nice piece ends with an optimistic note.It is said 'all good things must come to an end ' Like wise let us hope all bad things must also come to an end.The road to such an Utopian future, however desirable, is unfortunately paved with infinite thorns.The evil lies in the system. unless mind set changes,Unless drastic changes are introduced in the system of election /governance etc I am afraid corruption free society/caste less society may remain a sweet dream. Vasu

    பதிலளிநீக்கு
  2. @ vasu,
    man always lives on hope only.i recall here shelley's immortal words-"blow!the trumpet of a prophecy!if winter comes,can spring be far behind?".things will definitely change for the better;let us wait.
    thank you for your visit and very good comment.

    பதிலளிநீக்கு
  3. நம்பிக்கையும் சுதந்திரமும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.சுதந்திரம் போனாலும் நம்பிக்கை போகாதிருக்கட்டும். உங்கள் நம்பிக்கை நிறைவேற இறைவனை வேண்டுவோம்.

    பதிலளிநீக்கு
  4. @வே.நடன சபாபதி,
    நாளைய பாரதம் தலை நிமிர்ந்து நிற்க,இன்றைய இளம் தலை முறையைச் சரியாக உருவாக்கும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.நீங்கள் சொன்னது போல் இறையருளும் வேண்டும்.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. உங்களுடைய எழுத்துநடை ரொம்ப நல்லா இருக்கு,கதையும்.

    பதிலளிநீக்கு
  6. உங்கள் பாராட்டு எனக்கு உற்சாகம் அளிக்கிறது.நன்றி இனியவன் அவர்களே.

    பதிலளிநீக்கு