தொடரும் தோழர்கள்

சனி, நவம்பர் 20, 2010

வெட்கமில்லை,வெட்கமில்லை!

நெஞ்சு பொறுக்குதில்லையே-இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்--(பாரதி)

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி-கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி!

மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் - கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ? --(பாரதி)

வெட்கமில்லை ,வெட்கமில்லை-இதில் யாருக்கும் வெட்கமில்லை
--(பாரதி தாசன்)

(புதிய இந்தியாவை படைக்கப்போகும் சிறுவர்களே!உங்களுக்காக)

அச்சம் தவிர்.
ரௌத்திரம் பழகு.
உலுத்தரை இகழ்.

பாதகம் செய்வோரைக் கண்டால் நீ
பயங்கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்து விடு பாப்பா
அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா. --(பாரதி)

4 கருத்துகள்:

  1. ஆங்கிலத்தில் சொல்வார்கள்."சொல்லுங்கள்,திரும்பத்திரும்ப சொல்லுங்கள். சொல்லியபின் திரும்பவும் சொல்லுங்கள் நீங்கள் அதைப்பற்றி முன்பே சொல்லிவிட்டீர்கள் என்று." அதுபோல இந்த கால இளைஞர்களுக்கு இந்த கருத்தை திரும்பத்திரும்ப சொல்லவேண்டியதுதான். நம்புவோம் நல்லது நடக்குமென்று.

    பதிலளிநீக்கு
  2. //நம்புவோம் நல்லது நடக்குமென்று.//
    நிச்சயமாக!
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. பள்ளியில் படித்தது. இன்றய காலகட்டத்தில் எல்லேருக்கும் இது தேவை,வாழ்த்துகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  4. //இன்றய காலகட்டத்தில் எல்லேருக்கும் இது தேவை//
    பாரதியின் கவிதைகள் காலத்தைக் கடந்து என்றும் நிற்பவை.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இனியவன் அவர்களே.

    பதிலளிநீக்கு