தொடரும் தோழர்கள்

செவ்வாய், டிசம்பர் 21, 2010

மார்கழிப்பொங்கல்-5(திருப்பாவை,திருவெம்பாவை மற்றும் திருவாதிரை)

மார்கழி மாதத்தின் காலைப் பொழுதுகளை இனிமையாக்குவது சர்க்கரைப் பொங்கல் மட்டுமல்ல,இதமான திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களும்தான்.

நான் 7வது வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை கோவில்பட்டியில் படித்தேன்.மார்கழி மாதம் முழுவதும்,அந்த ஊர் செண்பகவல்லி அம்மன் கோவிலில், காலை எம்.எல்.வசந்தகுமாரி அவர்கள் பாடிய திருப்பாவைப் பாடல்கள்,ஒலிபரப்பப்படும்.அந்த சமயத்தில் தான் அந்த இசைத்தட்டுகள் புதிதாக வெளி வந்திருந்தன.ஆரம்ப நாட்களில் அதைக் கேட்பதே ஒரு சுகமான அனுபவமாக இருந்தது.ஆனால் அந்த மாதம் முடியும்முன் அந்த இசைத்தட்டும் கீறல் விழுந்துவிட எனக்கும் அதன் மீது இருந்த மோகம் விலகிவிட்டது.ஆனால் அது காலத்தை வென்ற ஓர் இசைத்தட்டு என்பது இப்போதும் எம்.எல்.வி.யின் அதே பாவைப் பாடலகள் ஒலிபரப்பப்படுவதைப் பார்க்கும்(கேட்கும்!)போது உணர்கிறேன்.

என் அத்திம்பேர் ஒருவர் இருந்தார்.அவர் மார்கழி மாதத்தின் 27 ஆம் நாளை மறக்கவே மாட்டார்.திருப்பாவையின் 27ஆம் பாடலும் அவருக்கு நன்குதெரியும்.குறிப்பாகக் கீழ்க்கண்ட பகுதி
” பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார” (!)

முதல் நாளே என அக்காவிடம் கூறிவிடுவார்”நாளைக்குக் கூடார வல்லி.சர்க்கரைப் பொங்கல் பண்ணிவிடு” என்று.
எனக்கு வேதம் கற்பித்த குருஜி ஒருவர்.சாப்பாட்டில் ரசிகர்.அடிக்கடி சொல்வார்.”சர்க்கரைப் பொங்கல் என்றால் அந்தப் பாத்திரத்தை லேசாச் சாய்த்து வைத்தால் நெய் அதிலிருந்து வடிய வேண்டும்” என்று!


திருப்பாவை,திருவெம்பாவை பற்றி விரிவாக,விளக்கமாக எழுத ஆசைதான்;ஆனால் அது என் சிற்றறிவுக்கு அப்பாற்பட்ட விஷயம்.அதற்கென்றே சில வல்லுநர்கள் இருக்கிறார்கள்.அவர்களைத் துணைக்கழைப்போம்—
http://sivamgss.blogspot.com
http://mozhi.blogspot.com/2007/12/1_19.html
http://margazhipaavai.blogspot.com/
இரண்டாவது சுட்டிக்கு நன்றி, திருமதி ஜெயஸ்ரீ அவர்களுக்கு.









மார்கழியின் மற்றொரு இனிய அங்கம்,திருவாதிரைப் பண்டிகை.ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படும்,சிவனுக்கு உகந்த நாள். பனி சூழ்ந்த ஹேமந்த ருதுவாகிய மார்கழி மாதத்தில், சிவபெருமானுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம் இணையும் நாள். “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என்று கூறிய முனிவர்களின் அறியாமையை நீக்கிட வந்த ஈசன் தனக்கு எதிராக ஏவப்பட்ட யானையை தன் ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகக் கொண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழித் திருவாதிரை.
அன்று தான் தில்லையில் நடராஜர் வ்யாகரபாத முனிவருக்கு நடன தரிசனம் தந்தாராம்.

அன்று,சிதம்பரத்தில் மிக விசேஷமான அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும் (கேட்டதுதான்.பார்த்ததில்லை)எங்கள் வீடுகளில் செய்யப்படும் களியும் ஏழு கறிக்கூட்டும் மிகவும் சுவையானவை. ஏழை பக்தரான சேந்தனார் அளித்த களியை சிவன் ஆவலோடு ஏற்றுக் கொண்டதிலிருந்து திருவாதிரை தினத்தில் களி முக்கிய நைவேத்தியம் ஆனது. இனிப்பான களியையும்,உப்பு,காரம் நிறைந்த கூட்டையும் சேர்த்துச் சாப்பிடும்போது –சுகம்!
செய்முறை தெரிய வேண்டுமா?ஜெயஸ்ரீயைத் தவிர வேறு யாரைக் கேட்க முடியும்? பாருங்கள்—
http://mykitchenpitch.wordpress.com/2007/01/04/thiruvaadhirai-kali/

நாளை திருவாதிரை.தில்லை நடராஜரை வணங்கி எல்லா நலமும் பெறுவோம்.

(நாளை எங்கள் காலனி பிள்ளையார் கோவிலில் காலை வெண் பொங்கல் பிரசாதத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.
வாங்க சாப்பிடலாம்!)

8 கருத்துகள்:

  1. ஐயா தயவு செய்து இன்ட்லி-ல் சமிட் செய்யவும் அல்லது ஓட்டு போட முடியாது.

    பதிலளிநீக்கு
  2. தென்னாடுடைய சிவனே போற்றி ! என்னாட்டவருக்கும் இறைவா போற்றி

    பதிலளிநீக்கு
  3. //அன்று,சிதம்பரத்தில் மிக விசேஷமான அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும்.//

    தங்களது பதிவைப்படித்ததும் சிதம்பரம் அண்ணாமலை நகரில் நான் படித்த நாட்களும், அப்போது பார்த்த ஆருத்ரா தரிசனுமும் நினைவுக்கு வந்தது. நினைவூட்டலுக்கு நன்றி.

    //நாளை எங்கள் காலனி பிள்ளையார் கோவிலில் காலை வெண் பொங்கல் பிரசாதத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன்.
    வாங்க சாப்பிடலாம்!//

    வந்து சாப்பிட ஆசைதான், ஆனால் இன்று எங்கள் வீட்டில் திருவாதிரை களி செய்கிறார்களே அதை எப்படி விடுவது?

    பதிலளிநீக்கு
  4. இனியவன், இண்ட்லியில் சப்மிட் செய்து விட்டேன்.
    நன்றி
    LK,ஓம் நமச்சிவாய.வருகைக்கு நன்றி.
    (இந்த இரண்டு பதில்களும் நேற்றே அளித்து விட்டேன்;ஆனால் வெளியாகவில்லை!)
    வே.நடனசபாபதி அவர்களே,நீங்கள் கொடுத்து வைத்தவர்;சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம் காணும் பேறு பெற்றீர்கள்.
    //இன்று எங்கள் வீட்டில் திருவாதிரை களி செய்கிறார்களே அதை எப்படி விடுவது?//
    நிறைய சாப்பிட்டீர்களா?
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  5. எல்கே அண்ணா இப்பொழுதுதான் உங்கள் வலைப்பூவின் லிங்க் தந்தார்,

    மிகவும் சுவாரசியமாக எழுதறீங்க,
    ரொம்ப நாள் அப்புறம் எங்காத்து பெரியவா பெரசத கேக்ராப்ல இருக்கு

    நன்றி

    பதிலளிநீக்கு
  6. //ரொம்ப நாள் அப்புறம் எங்காத்து பெரியவா பெரசத கேக்ராப்ல இருக்கு//
    பெரியவா பேச்சுச் சில நேரம்’தொணதொணப்பாக்’ கூடத்தோணும்!அப்படி ஆகாம இருந்தாச்சரி.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,காயத்ரி.

    பதிலளிநீக்கு
  7. வெண்பொங்கல் பிரசாதத்துக்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு