தொடரும் தோழர்கள்

திங்கள், டிசம்பர் 27, 2010

இசைவிழா

யாருமே எதிர்பாராத ஒரு கச்சேரிக்கு இன்று விமரிசனம் எழுதுகிறேன்.உடல்நிலை சிறிது சரியில்லாத காரணத்தால் கடந்த இரு நாட்களாகக் கச்சேரிக்குச் செல்ல முடியவில்லை.தவற விட்டவை-ரஞ்சனி,காயத்ரி & பிரியா சகோதரிகள்.

இன்று மாலை 4.15க்கு நான் நாரதகானசபா வளாகத்துள் நுழையும்போது கூட்டமே இல்லை.சில நாட்களுக்குமுன் அருணா சாயிராம் கச்சேரியின்போது கேட் வரை வரிசை நின்றது நினைவுக்கு வந்தது.அரங்கினுள் நுழைந்தேன்.1200 பேர் அமரக் கூடிய அரங்கில் ஒரு நூறு பேருக்கு மேல் இல்லை!எனக்கே ஏமாற்றம் என்றால் பாடுபவர்களுக்கு எப்படியிருக்கும்?

சரியாக 4.30க்குத் திரை தூக்கப்பட்டுக் கச்சேரி ஆரம்பமாயிற்று. முதலில் பேகடா ராக வர்ணம்-இந்தசல.நல்ல ஆரம்பம். விறுவிறுப்பான தொடக்கம்.தொடர்ந்து பங்காள ராகத்தில் கிரிராஜ சுதா தனய,கலாவதியில் ஒக பாரி ஜூடக.compact.
அடுத்து வந்தது கமாஸில் ’சீதாபதே நாமனஸு”ஸ்வரப் பிரஸ்தாரத்திலிருவரும் மாற்றி மாற்றிப் பாடும் போது நல்ல விறுவிறுப்பு.ஒவ்வொரு ஸ்வரக்கோவை முடியும்போதும் அந்த ‘பநிதபத’ பிரயோகம் அருமை.இதைத்தொடர்ந்து மதுரை மணி பிரபலமாக்கிய மார்க்க ஹிந்தோளக் கீர்த்தனை-சலமேலர.-சுகம்.
அடுத்து கீரவாணி-ஆலாபனையில்,சேஷாச்சாரி அவர்கள்,சந்தேகமே இல்லாத கீரவாணியைக் கொண்டு வந்து உலவ விட்டார்.வரமுலொசகி கீர்த்தனை ஏமாற்றவில்லை.முடிந்ததும் ஒரு குட்டித் தனி ஆவர்த்தனம்.

அடுத்தது.piece-de resistance of the concert-பூர்விகல்யாணி-ராகம்,தானம், பல்லவி.ஆலாபனையில் ராகத்தின் முழு அழகும் வெளி வந்தது.குழப்பம் இல்லாத ராக லட்சண வெளிப்பாடு.(சில நாட்களுக்கு முன் என் முன்னால் இருந்த இருவர்,பந்துவராளியா,பூர்விகல்யாணியா என்ற சர்ச்சையில் இருந்தனர்! ஆனால் பாடகரைக் குறை கூற முடியாது! ).கச்சிதமான தானம் முடிந்ததும், பல்லவி-சங்கரன்கருள் மீனாட்சி-ராகமாலிகை.பூர்விகல்யாணியைத்தொடர்ந்து.பிலஹரி,சாவேரி.ஹம்சா
நந்தி,ரேவதி.சேஷாச்சாரியின் கம்பீரமான குரலும்,ராகவாச்சாரியின் மென்மையான குரலும் ஒவ்வொரு ராகத்திலும் ஸ்வரம் பாடும் போது அந்த காம்பினேஷன்!—சூப்பர்.ஹம்சாநந்தியில் ஸ்வரம் பாடும்போது,ராகவச்சாரி’ம,நி’ என்ற ஸ்வரம் பாடும்போது,ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் அவர்கள் கைக் கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் இணைத்து money முத்திரை காட்ட மேடையில் ஒரு ஜாலி கூட்டணி உருவானது! RTP முடிவில் தனி ஆவர்தனம்.

ஆனால் எந்தக் கச்சேரியிலும் நான் 6.30க்கு மேல் இருக்க முடியாத நிலையில் இருப்பதால்,ஒரு நல்ல கச்சேரி கேட்ட மனநிறைவோடு புறப்பட்டு விட்டேன்.

நினைவில் நிற்கும் நிகழ்ச்சி.

(இந்த விமரிசனத்தில் ஆழம் இல்லை என்று எனக்குத் தெரியும்.ஆனால் நான் ஒரு இசை ரசிகன் மட்டுமே.நிபுணன் அல்ல.)
.கச்சேரி: ஹைதராபாத் சகோதரர்கள்-வாய்ப்பாட்டு
v.v.ரவி-வயலின்
ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ்-மிருதங்கம்
கோவை மோகன்-கடம்.

2 கருத்துகள்:

  1. // இந்த விமரிசனத்தில் ஆழம் இல்லை என்று எனக்குத் தெரியும்.ஆனால் நான் ஒரு இசை ரசிகன் மட்டுமே.நிபுணன் அல்ல.//

    தன்னடக்கத்தால் சொல்கிறீர்கள் என எண்ணுகிறேன். உங்கள் கூற்றுப்படி, இசை ரசிகன் விமர்சனமே இப்படி இருக்கிறது என்றால், நிபுணராக இருந்தால்??

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நடனசபாபதி அவர்களே!

    பதிலளிநீக்கு