தொடரும் தோழர்கள்

திங்கள், ஜூலை 30, 2012

கவனக் குறைபாடுள்ள அதீத சுறு சுறுப்பும்,கல்விக்குறைபாடும் உள்ள குழந்தைகளும் ,அவர்கள் பெற்றோரும்

கவனக்குறைபாடுள்ள,அதீத சுறுசுறுப்பான(ADHD) குழந்தைகள் பற்றிய இந்தப் பதிவு அனைவரும் படிக்க வேண்டியது.இதை எழுதிய பெண்ணின் மகள் அந்தக் குறைபாடுடையவள்.எனவே அப்பெண்ணின் அனுபவம் இங்கு முழுமையாக வெளியாகிறது. இது ஒரு ஆங்கிலப் பதிவு.அதைத் தமிழாக்கம் செய்வதை விட அப்படியே படித்தால் ,தாக்கம் அதிகமாக இருக்கும் என்றெண்ணி   அப்படியே வெளியிடுகிறேன்                

                  Children with ADHD, LD & their parents

Life can be tough, taxing & stressful if you have a kid with ADHD & learning difficulty. The children with this problem also face a lot of difficulty as they struggle at school & find it difficult adjusting themselves to the complexities & demands of life.
Let us first understand what ADHD really means. So many things have been written about & discussed about this problem. ADHD or Attention Deficit Hyperactive Disorder in children can cause lot of emotional problems in parents. There is no clarity on what causes ADHD. It is definitely not the result of laziness of parents, poor parenting or poor teaching. Hence there is no point in parents blaming each other or rather specifically the mother being blamed for not being patient, attentive & caring towards the child’s need.Lack of motivation and discipline ortoo much television or too much time spent on fast paced video or computer games are also not reasons for ADHD, though these factors may certainly worsen ADHD symptoms.
ADHD coupled with LD (Learning Disorder not learning disability anymore) can disrupt schooling life for children. Every day becomes a hurdle which they struggle to overcome. School life can be stressful due to inability to perform & non acceptance by peers.
Parents also undergo severe stress due to the same reasons.These children are very difficult to handle as they have high energy levels, are adamant & are capable of manipulating people according to their whims & fancies.
If your child is hyperactive, inattentive, or impulsive, it takes a lot of energy to tackle them. The constant monitoring can be frustrating and exhausting. Therefore parents should first learn to accept the fact about their child, & adjust accordingly, even if it involves sacrificing their personal goals & careers.
When it comes to behavior management, as a parent, one should be stern enough to say a “NO” whenever required. If the child realizes that you are likely to breakdown or give in to his demands, they gain an upper hand & try to use it to their advantage.
Some children with ADHD are hyperactive, while others are quiet—with their attention miles away. Some focus too much on a task and have trouble shifting it to a different task. Others are only mildly inattentive, but overly impulsive. Children with ADHD who are inattentive, but not overly active, may appear to be spacey and unmotivated. These children are often able to concentrate on activities they enjoy. But no matter how hard they try, they have trouble maintaining focus when the task at hand is boring or repetitive.
Parents should try to identify the child’s interest & nurture it accordingly. Extra care should be taken in designing activities for these children so as not to make it too long & boring.
These childrentry their best to be good, but still be unable to sit still, stay quiet, or pay attention. They may appear disobedient, but that definitely does not imply they are doing it purposely.
These children with impulsive signs and symptoms of ADHD also tend to be moody and to overreact emotionally. As a result, others may start to view the child as disrespectful & weird.
Patience is the key virtue here. However, it is easier said than done.
When a child becomes aggressive & has temper tantrums, parents should not react or try to control the child. The rage lasts for 10-15 minutes & will subside by itself.
Adjustments in life should to be made according to these children’s needs. Food habits need to be modified. Chocolates, fast food & sweets need to be avoided. Life should be patterned & followed with a set of rules as these children cannot accept changes. These patterns should be maintained as closely as possible to bring about positive results.It is necessary that the school also helps these children in overcoming their problems, assisting & encouraging them in their academics.
Remedial therapy for LD is necessary to boost self-confidence in these children; Occupational therapy helps in improving the attention & motor skills. Behavioral therapy aids in controlling the mood swings & temper tantrums.
Lastly ADHD often continues into adulthood, so don’t wait for your child to outgrow the problem. Treatment can help your child learn to manage and minimize the symptoms. Help these children & as parents one should aim in educating the society in understanding these children & helping them.

 இதுhttp://chillyforthesoul.blogspot.in என்ற பதிவிலிருந்து எடுக்கப் பட்டது.இதை எடுப்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.ஏனெனில் இந்தப் பதிவின் சொந்தக்காரி என் மகள்.




 

புதன், ஜூலை 25, 2012

இந்தியா ஒளிர்கிறதா?!நான்காவது தூணின் சக்தி!


வந்து விட்டதா சாந்திக்கு ஒரு விடிவு காலம்?

நேற்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளி வந்த,ஆசிய விளையாட்டில் வெள்ளிப்பதக்கம் பெற்ற சாந்தியின் வேதனையான நிலை பற்றிய செய்தியை அடக்கி ஒரு பதிவு எழுதியிருந்தேன்.-”இதுதான் இந்தியா!நெஞ்சு பொறுக்கு தில்லையே!!” என்ற தலைப்பில்.எத்தனை பேரை அச்செய்தி வெகுவாகப் பாதித்தது என்பது வருகை எண்ணிக்கை மூலம் தெரிந்தது.

எழுது கோலின் சக்தி உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது இன்று.

டைம்ஸில் வந்த செய்தியைப் படித்த பின் ஏற்பட்டிருக்கும் விளைவுகள் இதை உணர்த்துகின்றன.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர்,திரு.அஜய் மக்கன் அவர்கள், லண்டனிலிருந்து(ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கப் போயிருக்கிறாரோ?!) டைம்ஸ் ஃப் இந்தியாவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாவதுஆசிய விளையாட்டில் பதக்கம் பெற்ற சாந்தியின் நிலை கண்டு வருந்துகிறேன்.அனைத்தையும் சரி செய்யும் நோக்கில் மீண்டும் ஒரு பாலியல் சோதனை நடத்தப்பட வேண்டும்.  மேலும் எத்தனையோ  ஏற்கத் தக்க சோதனை முறைகள் இருப்பதாக அறிகிறேன்.சாந்தியின்  விஷயத்தில் அத்தகைய முறைகள் உபயோகிக்கப்படும்.சோதனையில் சாந்தி தேறினால், தென் ஆப்பிரிக்கா செய்தது போல் நாங்களும் சாந்தியின், பதக்கத்தையும், சான்றுகளையும் திரும்பப் பெறப் போராடுவோம்.சாந்தி மீண்டும் தன்  தடதள விளயாட்டை தொடர எண்ணினால் அதற்கு உதவி செய்வோம்.”மேலும் அவர்,சோதனை முடிவு எதுவாக இருப்பினும்,தேசிய விளையாட்டு நிறுவனத்தில் பயிற்சியாளர் படிப்புக்கு இடம் அளிக்கப்படும் என்றும் கூறினார்!

கெயில் நிறுவனம் உதவித்தொகையாக ரூ.ஒரு லட்சம் அளித்துள்ளது.

தமிழக அரசு அதிகாரிகள் பேசும்போது சாந்தியைஅவர்கள் கைவிடவில்லை என்றும்,அவருக்கு பயிற்சியாளர் வேலை வழங்கப்பட்டது என்றும் அவராகவே விலகி விட்டார் என்றும் ,அதன் பின் அவரைப் பற்றித் தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்றும்தெரிவித்தனர்.(என்ன சம்பளம் வழங்கப்பட்டது?)

அன்றைய தி.மு.க.அரசு சாந்திக்கு ரூ.15 லட்சம் பரிசாக வழங்கியதாம்.
(பணம் சாந்தியிடம் சேர்ந்ததா?எவ்வளவு கிடைத்தது?சாந்தி அதை என்ன செய்தார்?)

எப்படியோ ஒரு பத்திரிகையின் முயற்சியால் சாந்திக்கு வாழ்வில் ஒரு நம்பிக்கை ஒளி பிறந்திருக்கிறது!

டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

இந்தியா ஒளிரத் தொடங்கி விட்டதா?


(செய்தி :டைம்ஸ் ஆஃப் இந்தியா 25-07-2012)

டிஸ்கி:நான்காவது தூண் என்ன முயன்றாலும்,ஸ்விஸ் வங்கியில் பதுக்கப்பட்டிருக்கும் நம் அரசியல்வாதிகளின் பண விஷயத்தில் எதுவும் நடக்காது!

செவ்வாய், ஜூலை 24, 2012

இதுதான் இந்தியா!-நெஞ்சு பொறுக்குதில்லையே!!


ஒரு செங்கல் சூளை.

சுட்டெரிக்கும் வெயில்.

அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் ஒரு  பெண்.

எட்டு மணிநேர வேலை ஒரு நாளைக்கு.

தினக்கூலி ரூ.200/-

அந்தப் பெண்ணுடன் அவள் பெற்றோரும் அங்கு வேலை செய்கின்றனர்.

அந்தச் சூளை அவள் மாமாவுக்குச் சொந்தமானதுதான்.

ஆனால் வேலை செய்யாமல் காசு வருமா?

ஒரு நாளைக்கு அனைவருக்கும் சேர்த்து ரூ.500/- வருமானம்.

அதில்தான் ஆறு பேர் கொண்ட அந்தக் குடும்பம் வாழ்க்கையை 
நடத்தவேண்டும்.

இது சாதாரணமாக நடப்பதுதானே?

கொஞ்சம் அருகில் நெருங்கிப் பார்ப்போம்.

இந்தப் பெண்ணை எங்கோ பார்த்தமாதிரித் தோன்றுகிறதே!

இவள் புகைப்படத்தை எப்போதோ பத்திரிகைகளில் பார்த்திருக்கிறோமோ?

ஆம்!

இவள்தான்,தோஹாவில் 2006 இல் நடந்த ஆசிய விளையாட்டில்,800 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்ற  வெள்ளி மகள்.

சாந்தி!

போட்டிக்குப் பின் நடந்த  பாலினச் சோதனையில் பெண் இல்லை என்று உரைக்கப்பட்டுப் பதக்கத்தைப் பறி கொடுத்தவள்.

போட்டிகளில் மேற்கொண்டு பங்கேற்க முடியாதவாறு  இந்திய தடதள சம்மேளத்தினால் தடை விதிக்கப் பட்டவள்.

நமது நாட்டால் கைவிடப்பட்டவள்!

இன்று இந்த நிலையில்!

தென் ஆப்பிரிக்கா.

நடக்கப்போகும் லண்டன் ஒலிம்பிக்ஸில் அந்நாட்டு அணிக்குத் தலைமைதாங்கி அணிவகுப்பில் கொடி பிடித்து நடக்கப்போகும் பெண்.

21 வயதான செமென்யா.அப்படியென்ன விசேஷம்.?

2009 இல் பெர்லினில் நடந்த உலக தடதளப் போட்டிகளில் நடுந்தொலைவு ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றவள்.

சாந்தியைப் போன்றே  பின் நடந்த பாலினச் சோதனையில் தவறியவள்.பதக்கம் பறிக்கப்பட்டவள்.உலக அமைப்பால் தடை விதிக்கப்பட்டவள்.

ஆனாள் அவள் நல்லூழ்,அவள் இந்தியாவில் பிறக்கவில்லை.


தென் ஆப்பிரிக்கா,செமென்யாவின் கௌரவத்தையும்,உலக விளையாட்
டரங்கில் அவள் இடத்தையும்  பெறுவதற்காகப் போராடியது. 

அதன் பயன் தடை நீக்கப் பட்டது..

இன்று ஒலிம்பிக்கில் கொடியேந்தி பீடு நடை போடப் போகிறாள்.

இங்கு சாந்தி செங்கல் சூளையில்  வெந்து கொண்டிருக்கிறாள்!

இதுதான் இந்தியா!

நெஞ்சு பொறுக்குதில்லையே!

செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா,24-07-2012

திங்கள், ஜூலை 23, 2012

என் தாயின் பிறந்தநாள்

19 ஜூலை அன்று என் தாய்க்கு 94 வயது நிறைவடைந்தது. யு.எஸ்ஸில்ருந்து வந்திருந்த என் அண்ணா மகள், பிறந்த நாளைக்  கேக்(முட்டையில்லாத) வெட்டிக் கொண்டாட வேண்டும் என விரும்பினாள். நான் வெளியில் செல்ல முடியாது வீட்டில் அடைபட்டிருக்கும் நிலையில் அவளே எல்லா  ஏற்பாடுகளும் செய்தாள்.ஜூலை 8 அன்று நடைபெற்ற ஒரு பூணல் விழாவுக்காகவும்,13 அன்று நடந்த என அண்ணா வின் 50 ஆவது திருமண ஆண்டு நிறைவு விழாவுக் காகவும் வெளிநாடுகளில் இருக்கும்,அநேகர் வந்திருந்தனர்.எனவே அம்மாவின் பிறந்த நாள் விழாவன்று அம்மாவின், மகன்கள் மகள்கள்,பேரன் பேத்திகள்,கொள்ளுப்பேரன் பேத்திகள் என வீடே கலகலப்பாக இருந்தது.அப்போது நான் எடுத்த படங்கள் சில---


                                         பிறந்தநாள்  கேக்

                       
                                                              
           வாழ்வில் முதன்முறையாகக் கேக் வெட்டும் என் தாய்


                                    பேரன் பேத்திகளுடன்


                         கொள்ளுப் பேரன் பேத்திகளுடன்

             இந்த நேரத்தில் என்னை முடக்கி உட்கார வைத்துவிட்டானே அந்த இறைவன்?


                டிஸ்கி:: ஏனோ தெரியவில்லை,எழுதத் தோன்றவில்லை எதுவும்  எட்டு  நாட்களாய்,
                               நானோ காத்திருக்கிறேன் மாறும் இந்த மனோ நிலை  நாளை நாளை என்று!


    

சனி, ஜூலை 14, 2012

சகுனி -ஒரு பார்வை-பரல்கள்


சகுனி பற்றிச் சில சுவாரஸ்யமான செய்திகள் அறிவோமா?

சகுனி என்பவன் காந்தார நாட்டு இளவரசன்.காந்தாரியின் உடன்பிறப்பு.திருதிராஷ்டிரனின் மைத்துனன்.அவன் பயன் படுத்திய பகடைகள் அவன் தந்தையின் தொடை எலும்பி லிருந்து செய்யப்பட்டதாகவும்,அவன் சொல்லும் எண்ணையே காட்டும் என்று சொல்வார்கள்.

சகுனி காந்தார நாட்டு அரசன் சுலபாவின் கடைசி மகன். சகுனியின் சகோதரி, காந்தார இளவரசி காந்தாரியின் முதல் கணவன் இறந்து விடுவான், இரண்டாவது கணவன் உயிர் வாழ்வான் என ஒரு சோதிடர் சொல்லவும்,காந்தாரிக்கும் ஒரு ஆட்டுக்கும் மணம் செய்து வைத்து அந்த ஆட்டைப் பலி கொடுத்து விடுகிறார்கள்.எனவே,நடைமுறையில் காந்தாரி ஒரு கைம்பெண்ணாகவும்திருதிராட்டிரன் அவளது இரண்டாவது கணவனாகவும் ஆகிறார்கள்.

ஒரு நாள் பீமன் துரியோதனனை விதவையின் மகன் என்று கிண்டல் செய்ய.கோபம் கொண்ட சுயோதனன்,உண்மையைக் கேட்டுத் தெரிந்து கொண்டு,காந்தார மன்னனையும், அவன் புதல்வர்களையும் கைது செய்து சிறையில்  அடைத்து ,தினம் பிடியளவு உணவே அளிக்க,அது அனைவருக்கும் போதாது என்பதால்,கடைசி மகன் சகுனிக்கு அதை அளித்து அவனை வாழச் செய்து விட்டு மற்றவர்கள்  இறக்கிறார்கள். அதன் பின் காந்தாரியின் வேண்டு கோளின்படி சகுனி விடுதலை செய்யப் படுகிறான்.தன் தந்தையின் தொடை எலும்பில் பகடைகள் செய்த சகுனி,கௌரவர்களைப் பழி வாங்கச் சபதம் செய்து தன் சூழ்ச்சியினால் அந்த வம்சத்தையே அழிக்கிறான்.

இது பிற்காலத்தில் எழுந்த ,மகாபாரதத்தில் இல்லாத கதை!


**********************************************

சகுனி படம் பற்றி---
அதில் கதாநாயகன் பெயர் கமல்;காமெடியன் பெயர் ரஜினி. என்ரு அறிகிறேன்.ஏன் ரஜினியைக் காமெடியனாக்கி விட்டார்கள்?அதுவும் கமல் கதாநாயகனாக இருக்கும்போது? ரஜினி ரசிகர்களுக்கு ஏன் கோபம் வரவில்லை?(நான் படம் பார்க்கவில்லை;கேள்விப்பட்ட செய்திதான்) 

**********************************************

திருமணமான ஆண்களுக்கு இரு அறிவுரைகள்------
1)உங்கள் மனைவி விரும்பித் தேர்வு செய்யம் விஷயங்களைப் பற்றிக் கேலி செய்யாதீர்கள். நீங்களும் அவைகளில் ஒன்றுதான்!

2)நீங்கள் விரும்பித் தேர்வு செய்த விஷயங்கள் பற்றிப் பெருமைப் படாதீர்கள். உங்கள் மனைவியும் அவற்றில் ஒன்று.



நாம் ரசித்து எழுதும் சில பதிவுகளுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காதபோது ஏன் இன்னும் எழுத வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது.ஆனால் இந்த மனம் என்னும் நாய் மீண்டும் வாலைக்குழைத்துக் கொண்டு,அங்கேயேதான் சுற்றி வருகிறது!


வெள்ளி, ஜூலை 13, 2012

மீண்டும் ஒரு காதல் கதை!


தில்லி விமான நிலையம்.

பாதுகாப்புச் சோதனை முடிந்து,உள்ளே சென்று,விமானத்தில் ஏறக் காத்திருக்கும் கூட்டத்தில் ஒருவனாக நான்.

ஒரு இருக்கையில் அமர்ந்து,கையில் செய்தித்தாளை பிரித்து வைத்தபடி அமர்ந்திருக்கிறேன்.

பார்வை என்னவோ அங்கிருக்கும் மனிதர்களையும்,உள்ளே வந்து கொண்டிருப்பவர்களையும் மேய்ந்துகொண்டிருக்கிறது.

அப்போதுதான் அவர்கள் வந்தார்கள்.

ஆண் ,பெண்,ஒரு சிறுவன்,ஒரு சிறுமி.

அவனுக்கு 40 வயதும் அப்பெண்ணுக்கு 35க்குள்ளும் இருக்கலாம். சிறுவன் வயது  பத்துப் பன்னிரண்டும் சிறுமிக்கு அதை விடக் குறைவா கவும்  இருக்கும்.

அந்த ஆணை நானறிவேன்.செயலகத்தில்  நிதித்துறைத் துணைச் செயலாளராகப் பணி புரியும் ராகவன் ஐ..எஸ்.அந்தப்பெண் வேறு பக்கம் பார்த்துக்கொண்டே வந்தவள், கணவன் ஏதோ சொல்வதைக் கேட்டுத் திரும்பினாள்.அவள் முகத்தை,ஆண்டுகள் பலவான பின்னும் என் மனதை விட்டு  நீங்காத  அந்த முகத்தைப் பார்த்தேன். 

கடவுளே!பதினாறு ஆண்டுகளுக்குப் பின்….!

என் அருகில்  இருக்கைகள் காலியாக இருந்தபடியால் அவர்கள் என்னை நோக்கி வர ஆரம்பித்தனர்.நான் என் முகத்தைச் செய்தித்தாளில் புதைத்துக்  கொண்டேன்.என்ன செய்யப்போகிறேன்?

அருகில் அவர்கள் வருவதை உணர முடிந்தது.காற்றில் மிதந்து வந்த வாசனைத் திரவியத்தின் மணத்துடன்,எனக்குப் பழக்கமான அவள் மணம்.இன்னும் மாறாத ,குறையாத அதே மணம்.

நீங்க உக்காருங்க.என் தோழி கல்யாணி அங்கே இருக்கா.நான் பாத்துட்டு வரேன்என்று அவள் கணவன்,குழந்தைகளிடம் கூறும் குரல் கேட்டது.அவள் மணம் மெல்ல விலகியது.

நான் செய்தித்தாளிலிருந்து என் முகத்தை வெளிக்காட்டினேன்.என் அருகில் அவனும்,அப்பால் அவன் குழந்தைகளும் அமர்ந்திருந்தனர்.

ஹலோ!நான் ராதாகிருஷ்ணன் .ஏபிசி வங்கி மேலாளர்.”கையை நீட்டினேன்.

நீட்டிய கையைப் பிடித்துக் குலுக்கியவாறே அவன் சொன்னான்ராகவன்.துணைச் செயலாளர்.நிதித்துறை

தெரியும் .உங்களை இரு முறை வேலை நிமித்தம் சந்தித்திருக்கிறேன்.” நான் சொன்னேன்.

பொதுவாக ஏதோ பேசிக் கொண்டிருந்தோம்.

அவள் திரும்பி வந்துகொண்டிருந்தாள்.

வரும்போதே என்னைப் பார்த்து விட்டாள்.அந்த முகத்தில் தோன்றிய உணர்சிகளை என்ன வென்றே சொல்ல முடியாது.

வியப்பு,  பயம்,சோகம்,அன்பு,அதிர்ச்சி இவற்றின் கலவை. அவள் அருகில் வந்ததும் அவன் சொன்னான்.

மைதிலி!சார் ராதாகிருஷ்ணன்;வங்கி மேலாளர்.மெட்ராஸ்தான் போகிறார்.சார்!இவங்க என் மனைவி,மைதிலிஇருவரும் கை கூப்புகிறோம்

என் இதயம்மைதிலி,மைதிலிஎன்று இடும் ஓலம் அவன் காதுகளுக்குக் கேட்டு விடுமோ எனப் பயம் எனக்கு!

அவள் பார்வை!என் கண்களின் வழியாகப் புகுந்து இதயத்துக்குள்ளும் ஊடுருவும் பார்வை.அவள் அமர்கிறாள்

நான் கேட்கிறேன்எத்தனை நாள் மெட்ராசில்?”

அவன் சொல்கிறான்இரண்டு நாள்தான்.அதன் பின் ஸ்ரீரங்கம் போகிறோம்.அங்கு என் பெற்றோர் இருக்கிறார்கள்.நீங்கள்?”

நான் மெட்ராசில் ஒரு வாரம்.பின் மதுரை ஒரு வாரம்.மீண்டும் தில்லி.ஒரு வாரம் போதாதுதான் .நண்பர்களையெல்லாம் சந்திப்பதற்கு.’நான்

எனக்கு இரண்டுநாள் கொஞ்சம் பணி சார்ந்த வேலையிருக்கிறது மெட்ராசில்.மைதிலிக்குத்தான் நேரமே போதாது.!மெட்ராசில் இவள் பொழுது போக்கும் விதமே அலாதி.கபாலி கோவில், தண்ணித்துறை ஆஞ்சனேயர் கோவில், சாந்திவிஹார்,சாந்தோம், இப்படி.நாளை காலையே கபாலீச்வரர் கோவில் போய் விடுவாள் என் மாமனார் ஒரு வீர வைஷ்ணவர்.ஆனால் இவள் இப்படி!”சிரித்துக் கொண்டே சொல்கிறார்.

நான் அவளைப் பார்க்கிறேன்.கண்களில் கண்ணீர் கசிவது போலத் தோன்றியது . என்னவோ சொல்ல வருவது போல் தோன்றியது

வேண்டாம் மைதிலி.அழுது விடாதே.நாம் பிரியும்போது என் மார்பில் முகம் புதைத்து அழுதாயே,அப்போது உன் கண்ணீர்க் கரையும், மைக்கரையும் பட்ட சட்டையை ஒரு பொக்கிஷமாகப் போற்றி வைத்திருக்கிறேன்.இத்தனை நாட்களாக என்னை நீ நினைவில் வைத்திருப்பாயா என்ற சந்தேகத்தில் இருந்தேன்.இன்று தெரிந்து கொண்டேன்.நாம் சந்தித்த இடங்களைக் கூட நீ இன்னும் மறக்கவில்லை என்று.நாளை காலை கபாலி கோவில் போக எண்ணியிருந்தேன்.ஆனால் மாட்டேன்.இருவருக்கும் ஒரு தர்ம சங்கடமான நிலை உருவாக வேண்டாம்.நீ என்னை மறக்கவில்லை.இது போது எனக்குஎன் மனத்தின் பேச்சு.

விமானத்தில் ஏற அழைப்பு வருகிறது .புறப்படுகிறோம்.அவளைப் பார்க்கிறேன்.அவளும் என்னை.கண்களின் வழியே காலத்தை கடந்து கடந்த காலத்துக்குப் பயணிக்கிறேன்.

அதில்தானே இத்தனை நாட்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! 


(இவற்றையும் படித்து விடுங்களேன்!) ஒன்று
                                                         இரண்டு
                                                         மூன்று
                                                          

வியாழன், ஜூலை 12, 2012

நம்பிக்கையும் வெவகாரம் வேலுச்சாமியும்!


//விசுவாசம் என்பது என்ன?

பொதுவாக இந்தச் சொல் விவிலிய மொழிபெயர்ப்புகளில் அதிகம் பயன் படுத்தப்பட்ட சொல்.

if you have faith as small as a mustard seed, you can say to this mountain, ‘Move from here to there,’ and it will move. Nothing will be impossible for you.”
கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது.” - (மத்தேயு 17: 20).

இதிலிருந்து விசுவாசம் என்பது faith என்பதைக் குறிக்கிறது எனத் தெரிகிறது.
நம்பிக்கை என்பது சாதாரணச் சொல்.

விசுவாசம் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

சிக்எனப் பிடிப்பது.//

மேலே உள்ளது எனது முந்தைய பதிவொன்றில் நம்பிக்கை பற்றி நான் எழுதியது.

என் நம்பிக்கை எந்த அளவுக்கு உறுதியானது என்று சோதிக்கும் நேரம் நேற்று வந்தது.

1 ஆம் தேதி காலில் அடிபட்டது.2 ஆம் தேதி மருத்துவரிடம் சென்றேன். அன்று கால் அப்பமாக வீங்கியிருந்தது.கிரேப் பேண்டேஜ் கட்டுப் போட்ட மருத்துவர், ஒரு வாரம் கழித்தும் வீக்கம் குறையவில்லையெனில்  பிளாஸ்டர் (மாக்கட்டு) போட வேண்டியதுதான் எனச் சொல்லி விட்டார்.

தினமும் நான் என் காலைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். காலையில் குறைவாக இருக்கும் வீக்கம் இரவுக்குள் அதிகமாகி விடும். ஆயினும் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டுதானிருந்தது.நேற்று மருத்துவரிடம் போகத் தீர்மானித்தேன்.வீக்கம் முழுவதும் வற்றாததால், மாக்கட்டுப் போட வேண்டும் எனச் சொல்லி விடுவாரோ எனப் பயம்!

எங்க்ள் காலனியில் இருந்து அருள் பாலிக்கும் எங்கள் காவல் தெய்வமான விநாயகரை (லக்ஷ்மி கணபதி) வணங்கி வேண்டினேன்,மாக்கட்டுப் போடாமல் காப்பாற்றுங்கள் என்று.

என் வேண்டுதல் நிறைவேறும் என்உறுதியான நம்பிக்கையில்----

ஆட்டோக்காரரிடம் மருத்துவனை போய் வர வேண்டும் .ஒரு 15 நிமிடம் தான்  காத்திருக்க  வேண்டும் எனக் கூறினேன்.
மிகக் குறைவான அளவு பணமே எடுத்துச் சென்றேன்.

சென்றேன் ,கண்டேன் ,வந்தேன்.

என் நம்பிக்கை வீண்போகவில்லை.

எல்லாம் ஓகே.30 ஆம் தேதி வாருங்கள் x ரே எடுத்துப் பார்த்து  விடலாம் என மருத்துவர் சொல்லி விட்டார்.அதுவரை கிரேப் பேண்டேஜ்தான்.  
சாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இது நம்பிக்கைக்கு ஒரு மிகச் சிறிய உதாரணம்.

டிஸ்கி:வெவகாரம் வேலுச்சாமி சொல்கிறார்”இது என்ன சார் பெரிய விஷயம்?உங்களுக்குத் தெரியும்.கையில் பணமில்லை,நாளைக்கு வருகிறேன் என்று சொல்லி விட்டு வரலாம்;அல்லது ’பரவாயில்ல நாளைக்கு கொடுங்கள் இப்போதே பிளாஸ்டர் போடுகிறோம்’ எனச் சொன்னால் ஆட்டோக் காரரைக் கைபேசியில் அழைத்துச் சொல்லி விடலாம் என்பது போன்ற மாற்று வழிகள் இருப்பது.என்ன பெரிய நம்பிக்கை!ஹே,ஹே!