தொடரும் தோழர்கள்

சனி, அக்டோபர் 26, 2013

ஒரு பெண்,ஒரு திருட்டு,ஒரு நினைவு!



நேற்று மதியம் ஒரு மணி இருக்கலாம்.

அறையினுள் ஏதோ வேலையாக இருந்தேன்.

“அங்கிள் ”என அழைக்கும் குரல் கேட்டது.

அக்குரலுக்குச் சொந்தக்காரி எதிர் வீட்டுப் பெண். 

வாசலுக்கு வந்தேன்.

அங்கு நின்று கொண்டிருந்த அப்பெண் என்னைப் பார்த்ததும் அழ ஆரம்பித்து விட்டாள்.

பதறிப் போய்க் கேட்டேன்”என்னம்மா ஆச்சு”

”என் பர்ஸ் திருடு போயிடுச்சு அங்கிள்”-அழுகை அதிகமானது

ஒரு மணி நேரத்துக்கு முன்புதான்,அடுத்தவீட்டு ஆண்ஃடியுடன் தி.நகர் செல்வதாக மகிழ்ச்சியுடன் என்னிடம் சொல்லிச் சென்ற பெண்,இப்போது அழுது கொண்டே வந்து நிற்கிறாள்.

“பஸ்ஸில அடிச்சாட்டானா”

”இல்ல .நடந்து போயிட்டு இருக்கும்போதே”

பலவாறு புலம்பினாள் அந்தப்பெண்,வயது 23.திருமணமாகி இரு ஆண்டுகள் ஆகின்றன. கணவன் மென்பொருள் துறையில் பணி.

தி.நகரில் உஸ்மான் சாலையில் தீபாவளிக் கூட்டத்தில் எத்தனை பேர் இது போல் பறி கொடுக்கிறார்களோ? 

இயன்றவரை சமாதானம் செய்தேன்.

அப்போது எனக்கு சில சமயங்களில் நிகழ்ந்த இழப்புப் பற்றியும் சொல்லித் தேற்ற முயன்றேன்.

கடைத்தெருவில்,பேருந்தில் ,கூட்டம் நிறைந்த கடையில் எனப்பல இடங்களில் பிக்பாக்கெட் அடிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

ஆனால் யாருக்காவது,கோவிலுக்குள் பணத்தைப் பறி கொடுத்த அனுபவம் உண்டா?!

இது நிகழ்ந்தது கன்யாகுமரி கோவிலில்.

அப்போது நான் முளகுமூடு கிளையில் பணியில் இருந்தேன்.

ஒரு சனியன்று மாலை சுசீந்திரம்,கன்யாகுமரி சென்று இரவு கன்யாகுமரியில் தங்கி,மறு நாள் காலை கோவிலுக்குச் சென்றோம்.சட்டைப் பாக்கெட்டில் பர்ஸ் வைத்திருந்தேன்.தரிசனம் முடிந்து சுற்றி வந்த பின் உணர்ந்தேன்,பாக்கெட்டில் பர்ஸ் இல்லை என்பதை..’திக்’ கென்றது அதைத் தவிர வேறு பணம் என்னிடம் கிடையாது!நம்பிக்கையின்றி தேடிப்பார்த்தேன் கிடைக்குமா?

“முருகா!இதென்னப்பா சோதனை “என முருகனிடம் புலம்பினேன்.கந்தர் சஷ்டிக் கவசத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தேன்

பின் கோவிலின் நிர்வாக அதிகாரியின் அறைக்குச் சென்றேன்.

என்னை அறிமுகப்படுத்தி கொண்டு நடந்ததைச் சொன்னேன்.

“கோவிலுக்குள்ள அய்யப்பமார் கூட்டம்.அதில மோசமான பயகளெல்லாம் இருப்பாங்க .அவங்க எவனோதான் அடிச்சிருப்பான்”

என் கையில் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி நீட்டிய படியே சிறிது பணம் கொடுத்து உதவவேண்டினேன்

அதை மறுத்து விட்டு அவர் எனக்கு ஊர் திரும்பத்தேவையான தொகையை அளித்தார்
”தரிசனம் ஆயிடுச்சா”எனக் கேட்டார்.

ஆகிவிட்டது எனச் சொல்லி விட்டு,அவரின் பெயரைக் கேட்டேன்,பணத்தைதிருப்பி அனுப்பு வதற்காக.

“வடிவேல் முருகன்”என்றார்................


”உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே”...கந்தர் அனுபூதி


                                                                                                                

33 கருத்துகள்:

  1. முருகா...! அனைவருக்கும் இது போல் அருள் தா முருகா...!

    பதிலளிநீக்கு
  2. //நடந்து போயிட்டு இருக்கும்போதே”// இது இழப்பிற்கும் மேல்... சற்று மோசம். அனுவித்திருக்கிறேன். தொடர்ந்து வந்த ஆறேழு மாசத்திற்கு தெருவில் நடக்கையில் எதிர்பாராத சமயம் தெரிந்தவர்கள் பின்னால் வந்து 'ஹாய்' சொன்னாலும் திக்கென்று ஒரு நொடி இதயம் துடிக்க மறந்து, மயக்கம் வருவது போல ஆகிவிடும். :-)
    பதினெட்டு வருடங்கள் கழிந்தும் இன்னும் ஆள்மனது மறக்கவில்லை என்பதை இரண்டு வாரம் முன்பு புரிந்து கொண்டேன். யாராவது உதவி கேட்டு வந்தாலும் பயமாக இருக்கிறது. :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்;இது போன்ற நிகழ்வுகள் ஆழமந்த்தில் தங்கிவிட்டால் சிரமம்தான்.
      நன்றி இமா

      நீக்கு
  3. #யாருக்காவது,கோவிலுக்குள் பணத்தைப் பறி கொடுத்த அனுபவம் உண்டா?!#
    பறி கொடுத்தது அல்ல அந்த பணம் ,காணிக்கை செலுத்தியது என்றும் சொல்லல்லாம் !
    த.ம.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணிக்கை யாரூக்கொ அல்லவா போயிருக்கிறது!
      நன்றி ஜோக்காளி

      நீக்கு
  4. #யாருக்காவது,கோவிலுக்குள் பணத்தைப் பறி கொடுத்த அனுபவம் உண்டா?!#
    பறி கொடுத்தது அல்ல அந்த பணம் ,காணிக்கை செலுத்தியது என்றும் சொல்லல்லாம் !
    த.ம.3

    பதிலளிநீக்கு
  5. பாலாபிஷேகம் தேனாபிஷேகம் செய்தும் அடங்காத பட்டாசு
    பட்ட வலி அடங்கியது அன்றொருநாள் என் வாழ்விலும்
    கந்த சஷ்டி கவசத்தைப் பாடிக்கொண்டே தூங்கிய போது .
    எல்லையற்ற எம் பெருமானின் கருணையால் நிகழ்ந்தவை
    இன்னும் பல என் இதயத்தில் உறைந்து கிடக்கின்றது ஐயா .
    கந்தனின் கருணையை நினைவூட்டிய சிறந்த படைப்பு .அவன்
    அருள் அனைவர்க்கும் கிட்ட வேண்டும் .சரியான சமையத்தில்
    இடப்பட்ட இப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா .இன்னும் தங்களின்
    வாழ்துக்காகக் காத்திருக்கின்றது எனது நெஞ்சமும் இங்கே
    http://rupika-rupika.blogspot.com/2013/10/700.html

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    ஐயா
    ரசித்து படிக்ககூடிய அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. பணம் பறிகொடுத்தது எந்த இடமானாலும் , அது பார்க்கோ அல்லது கோயிலே ஆனாலும் சரி கஷ்டம் தான் .பிரச்னை பணம் காணாமல் போனதுதானே தவிர இடம் ஒரு பொருட்டல்ல .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பக்தி பிரதனமாக இருக்க வேண்டிய இடத்திலும் இது நடக்கிறதே என்பதே வருத்தம்!
      நன்றி அபயா அருணா

      நீக்கு
  8. வித்தியாசமான அனுபவம்தான்! நானும் சென்ற வாரம் இரண்டாயிரம் ரூபாய் பணம் காய்கறி வாங்கும் போது கடையில் தொலைத்துவிட்டேன்! நம்ம மக்கள் அவ்வளவு நல்லவர்களாக இருக்கிறார்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது போல் இழப்பைச் சந்திக்காதவர்ளே இல்லையோ!
      நன்றி சுரேஷ்

      நீக்கு
  9. எனக்கு அம்மாதிரி அனுபவம் உண்டு. பத்தாண்டுகளுக்கு முன்னால், உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் கற்பூர ஆரத்தி முடிந்து, கூட்டத்திலிருந்து மீண்டு வெளியில் வந்து பார்த்தால், வீட்டு சாவி மற்றும் பர்ஸ் அடங்கிய மற்றொரு சிறு பர்ஸ் காணாமல் போயிருந்தது. ஆச்சரியம் என்னவென்றால், உடுப்பியில் செருப்பு எப்போதுமே திருட்டு போகாது. (சென்னையில் செருப்பு திருடர்கள் அதிகம்). பர்ஸ் போய்விட்டது! என்ன செய்வது, கடவுளுக்கு வேலை அதிகம். நம் உடைமைகளை நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். (த.ம.6) - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை .நான் உடுப்பியில் இருந்தகாலத்தில் ஆச்சரியப்பட்ட விஷயம் இந்தச் செருப்புத் திருடு போகாததுதான்.புதுமையான அனுபவம் உங்களுக்கு!
      நன்றி

      நீக்கு
  10. //ஆனால் யாருக்காவது,கோவிலுக்குள் பணத்தைப் பறி கொடுத்த அனுபவம் உண்டா?!//

    நீங்கள் பணத்தை பறிகொடுத்தீர்கள். ஆனால் நானோ! கர்நாடகாவில் உள்ள தென் கன்னட மாவட்டத்தில் உள்ள தர்மஸ்தலா என்ற இடத்தில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தேன்.(அங்கு எல்லாமே இலவசம் தங்குமிடம் உட்பட! அங்ககே திருட்டு இல்லையென்றும் அநேக வழக்குகள் நீதிமன்றம் போகாமல், அங்கு சென்று இறைவன் சன்னதியில் முறையிட்டு சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்குள் சமரசமாகி போய்விடுவார்கள் என்பார்கள்.) அந்த கோவிலுக்கு சென்றபோது வெளியே முதல் நாள் தான் வாங்கிய எனது புதிய காலணியை விட்டு சென்றேன். எல்லாமே இலவசம் என்பதால் காலணி வைக்குமிடத்தில் கூட ‘டோக்கன்’ தரவில்லை. உள்ளே போய் தரிசனம் செய்துவிட்டு வந்தால் எனது காலணியைக் காணவில்லை! அந்த ஊரில் காலணி கடைகள் இல்லாததால் வெறுங்காலுடன் 15 கிலோ மீட்டர் அருகில் இருந்த பெல்தங்காடி என்ற ஊருக்கு சென்று விசாரித்தால், அங்கும் அந்த கடை அன்று திறக்கப்படவில்லை. காலணி அணியாமல் பாண்ட் மட்டும் அணிந்து காலை சிற்றுண்டி சாப்பிட சென்ற என்னை எல்லோரும் வினோதமாக பார்த்தார்கள். பிறகு அங்கிருந்து 60 கிலோ மீட்டர் சென்று மங்களூரில் புதிய காலணியை வாங்கினேன். எனவே திருடர்கள் எங்கும் இருப்பார்கள். நாம் தான் கவனமாக இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தர்மஸ்தலாவிலா?உங்கள் அனுபவம் சிறிது சிக்கலானதுதான்!
      நன்றி

      நீக்கு
  11. நாம் எவ்வளவுதான் உஷாராக இருந்தாலும் ஒரு நொடியில் ஏமாந்து விடுகிறோம். பர்ஸை இழந்து விட்டு முன்பின் பழக்கமில்லாத இடத்தில் மற்றவர்களிடம் நாம் நம் நிலைமையச் சொன்னால் நம்புவார்களோ மாட்டார்களோ என்ற பதற்றம் விவரிக்க முடியாதது. எனக்கும் இந்த அனுபவம் உண்டு. உங்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் வெவ்வேறு பெயரில் வடிவேல் முருகன் அருள் உண்டு.

    பதிலளிநீக்கு
  12. பர்ஸ் தொலைந்தாலும் பணம் போனாலும் பரவாயில்லை, அதில் வைத்திருக்கும் ஐ.டி.கார்டு, லைசென்ஸ், போன்ற சமாச்சாரங்களை நாம் மீண்டும் பெறுவதற்கு படாத பாடு பட வேண்டும்.... அதற்காகவேனும் உஷாராக இருக்கவேண்டும்....

    பதிலளிநீக்கு
  13. கோவிலில் திருட்டு..... :(

    நல்ல வேளை உங்களுக்கு உதவ ஒரு நல்ல உள்ளம் அங்கே இருந்ததே.....

    பதிலளிநீக்கு
  14. சாமி நகையையே திருடுகிறார்கள்,இது எம்மாத்திரம்?எப்போதும்,எங்கும் கவனம் வேண்டும்!

    பதிலளிநீக்கு
  15. எப்படியும் ஏமாந்து விடுகிறோம்...
    எம்பெருமான் முருகன் அருள் எப்போதும் எல்லாருக்கும் உண்டு..

    பதிலளிநீக்கு
  16. நீங்க உண்டியல்ல காசு போடாததால காண்டாகி, முருகனே லவட்டிட்டாரோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசியாகப் போடலாம் என்று நினைத்திருக்கையில் இப்படி நடந்தால்?!
      நன்றி

      நீக்கு