தொடரும் தோழர்கள்

வியாழன், நவம்பர் 27, 2014

பால் எத்தனை பால்!



நேற்று தேசிய பால் தினம்.

இந்தியாவில் வெண்மைப் புரட்சி நடந்து பால்வளம் பெருகி விட்டது.

அதனால் ’பாலும் தேனும் பெருகி ஓடுதா நாம பொறந்த சீமையிலே’ என்று கேட்காதீர்கள்

ஒரு காலத்தில் ஆவினை மட்டுமே நம்பி இருந்தோம் மெட்ராசில்.

ஞாயிறு, நவம்பர் 16, 2014

சன்டே---ஃபன்டே

ஏண்டா இவ்வளவு நேரம் கழிச்சு வரே?

வழில ஒருத்தன் ஆயிரம் ரூபாய் நோட்டைத் தொலச்சிட்டுத் தேடிட்டிருந்தான்.

ஓ!தேடறதில அவனுக்கு உதவி பண்ணினாயா?நல்ல காரியம்.

இல்லயில்ல!அவன் போற வரைக்கும் நான் அந்த நோட்டு மேல நின்னுக்கிட்டிருந்தேன்!

வெள்ளி, நவம்பர் 14, 2014

ஓடிப்போனவன்!



கை பேசி அழைத்தது.

ரவி எடுத்தான்.

”ரவி!போலீஸ் உன்னை நெருங்கிட்டாங்க!நீ இருக்கும் இடத்தை குறி வெச்சிக்கிட்டே இருக்காங்க.அவங்க கிட்ட மாட்டினேன்னா என்கவுண்டர்தான்;கைது எல்லாம் கிடையாது.தப்பிக்க முயற்சி செய்.” அவனது வக்கீல் தந்த தகவல்.

செவ்வாய், நவம்பர் 11, 2014

மனம் ஒரு குரங்கு




உடல் நலத்துடன் வாழ உணவில் கட்டுப்பாடு அவசியமாகிறது.

 உங்கள் வயதுக்கேற்ப, உடல் நிலைக்கேற்ப என்ன சாப்பிடலாம்.எவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் அறிவுரை சொல்வதற்கு உணவியலர்கள் இருக்கிறார்கள்.
கட்டுப்பாட்டுடன் இருந்தால் நலமாக வாழலாம்.

ஆனால் இந்த மனம் இருக்கிறதே,அது குரங்கு..மரத்துக்கு மரம் தாவும் குரங்குகள் போல், சிந்தனைகள் அங்கும் இங்கும் கட்டுப்பாடற்றுத் தாவும்.

திங்கள், நவம்பர் 10, 2014

அங்கொன்றும் இங்கொன்றும்!



ஒரு மனிதன் முகம் போல் மற்றர் முகம் இருப்பதில்லை.அது போலவே நடைகளும் வேறுபடுகின்றன.எத்தனை விதமான நடைகள்!குறுகலான அடிகள்,நீண்ட அடிகள்;கைகளை நன்கு வீசி,கைகளை அதிகம் வீசாமல்;நன்கு நிமிர்ந்து,சற்றே கூனியவாறு;முழங்கால்களை நன்கு மடக்கி,அதிகம் மடக்காமல்;யானை போல் ஆடி ஆடி,ஒரே சீராக என்று எத்தனை விதமான நடைகள்!நடக்கும் விதமே ஒருவரின் குணத்தை அடிப் படையாகக் கொண்டது என் நான் எண்ணுகிறேன்.

ஞாயிறு, நவம்பர் 09, 2014

சண்டே-ஃபன் டே!

சார்பியல் கோட்பாடு என்பதை எப்படி எளிதாக விளக்குவது?

ஐன்ஸ்டீன் விளக்குகிறார்.........

நீங்கள் ஒரு சூடான அடுப்பின் மீது ஒரு விநாடியே கை வைத்தாலும் அது ஒரு மணி நேரம்போல் தோன்றும்.

ஆனால் நீங்கள் ஒரு அழகான பெண்ணுடன் பொழுது போக்கும்போது.ஒரு மணி நேரம் என்பது ஒரு விநாடியாகத்தோன்றும்.

இதுதான் சார்பியல்! 

எப்புடி?!

வெள்ளி, நவம்பர் 07, 2014

வாலிப,வயோதிக அன்பர்களே!



வாலிப வயதில் சிலவற்றில் நாட்டம்.

வயோதிகத்தில் சிலவற்றில் நாட்டம்.

வயதுக்கேற்ற செயல்கள் அவசியம் தேவைதான்.

எதுவுமே அதிகமானால்தான் பிரச்சினையெல்லாம்.

சிறுவன் வயதுக்கு மீறிய செயலிலோ,பேச்சிலோ ஈடுபட்டால் இந்த வயசிலேயே இப்படின்னா பெரியவனானப்புறம் அவ்வளவுதான் என்பர்.

வயதானவர் இளைஞன் போல் நடந்தால் இந்த வயசில பெருசு போடற ஆட்டத்தைப் பாரு என்பர்.

வியாழன், நவம்பர் 06, 2014

சம்பவாமி யுகே யுகே!




தர்மத்தைச் சொல்ல வந்தோர்

தடியோடு காட்சி தாரார்!

 உண்மைதான் ஒப்புக் கொள்வேன்.

காலங்கள் மாறும்போது

தர்மத்தின் விதிகள் மாறும்!