தொடரும் தோழர்கள்

திங்கள், ஜனவரி 04, 2016

அழகியும், துறவியும்!



முன்னமொரு காலத்தில் அடர்ந்த கானகத்தில் ஞானி ஒருவர் நதிக்கரையில் பர்ணசாலை மைத்து அமைதியாக தியானம் செய்து வந்தார். இளம் வயதிலேயே இயற்கை இடர் பாடுகளால் தர்ம பத்தினியை இழந்தவர்.


அவர் தன்னிடம் குருகுல வாசம் செய்ய விரும்பும் மாணக்கர்களை கடுமையான சோதனைக் குள்ளாக்கித்தான் சிஷ்யர்களாக சேர்த்துக்கொள்வார். ஐந்து வருடங்களில் ஒரே ஒரு மாணவன் தான் சோதனைகளை மீறி சிஷ்யனானான் .புத்திசாலி, திறமைசாலி முன்னமே வேத, உபநிஷத் துக்களை கரைத்துக் குடித்தவன் மூன்று ஆண்டுகள் குருகுல வாசத்திற்குப் பிறகு துறவு பூண்டு குருவிற்கு நிரந்தரமாக பணிவிடை செய்ய விரும்பினான். இல்லற சுகத்தை அனுபவிக்காமல் துறவு பூணுவதை குரு அனுமதிக்கவில்லை. இருந்தாலும் அவன் குருவின் பணிவிடையிலேயே இரண்டு ஆண்டுகள் கழித்தான்.


குரு நூறு வயது வாழ்ந்து சமாதி அடைந்த பின் தன்னிச்சையாய் வாழ வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டான். இல்லறம் மேற்கொள்லாமல் துறவறம் நாடக்கூடாது என்ற குருவின் ஆணையை சிஷ்யன் வேதமாக மதித்தான்.ஆனால் ஒரு துறவியைப் போலத்தான் வாழ்ந்து வந்தான்.



அமர்நாத் யாத்திரையை மேற்கொண்டு, பனிக்குகை அருகில் ஒடிக்கொண்டிருந்த லிட்டர் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த  போது ஒர் அழகி மான்போல் துள்ளி ஒடினாள். முழு நிலவை மேகம் மூடியது போல உணர்ந்தார். அமர்நாத் குளிரிலும் அவருக்கு வியர்த்து விருவிருத்தது. இதுநாள் வரை அறத்துப்பால், பொருட் பாலில் திளைத்தவருக்கு மூன்றாவது பாலின் மீது நாட்டம் வந்தது.

அழகி மின்னல் போல் தோன்றி மறைந்தது ஒரு மாயைதான்.

துறவி காதல் வசப்பட்டார். அழகியை எப்படியாவது அடைந்து விடவேண்டும் என்ற இச்சை விஸ்வரூபம் எடுத்தது.ஆறு மாதங்கள் கடும் தவம் புரிந்தார் . அவரது சிரத்தையான தவத்தை மெச்சி, ‘அமர்நாத்தின் போலேநாத் சங்கர்துறவியின் குருவை பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார்.

குருவே வந்தனம்.  அந்த அழகி என்னவள் ஆனால் தான் எனக்கு இல்லறம்.

நன்று, அவளை உனதாக்கிக் கொள்ள உனக்கு அத்யாவசியமான ஏதாவது ஒன்றை நீ இழக்கவேண்டியிருக்கும்”.

எதை வேண்டுமானாலும் இழக்கத்தயார். அவள் தான் என் உயிர் மூச்சு

உணவு, உறக்கம் இவைகளுள் ஏதாவது ஒன்றை நிரந்தரமாக இழந்தால் அவள் உனக்கே

உணவு செல்வதில்லை. அவளைப் பார்த்த நாழிகையிலிருந்து உறக்கம் கொள்வதில்லை. சதாசர்வ காலமும் அவளுடன் இருப்பதே என் வாழ்வின் லட்சியம். உறக்கத்தை துறக்கத் தயார்”.

அவளை பண்புடன் நடத்த வேண்டும்அவள் உறங்கும் போது நீ அவளை தீண்டினால் உன் மூளை  வெடித்துச் சிதறும். நீ கோரமாக இறப்பாய் (மடிவாய்). ஒரு வினாடி அவகாசம் தருகிறேன்,  நீ யோசித்து முடிவெடு.

எனக்கு எந்த அவகாசமும் வேண்டாம். இந்த வினாடியே அவள் வேண்டும்.

நன்று இல்லறமே நல்லறம் என்ற உண்மையை நிலை நாட்டுஎன்று கூறி ஞானி மறைந்தார்.

நொடிப் பொழுதில் அழகி மாலையுடன் தோன்றினாள்.

அந்த அழகியைக் கண்டதும் அகமகிழ்ந்து துறவறம் துறந்து இல்லறம் நாடினார்.

இகத்தில் இருக்கும் சுகம் எத்தனை ஆனாலும் அதை இருவர்க்கும் பொதுவாக்கலாம். அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம்என்று துறவி மொழிய இருவரும் ஒன்றாயினர்.
கானக விலங்குகளெல்லாம் துள்ளிக் குதித்தன. மான்கள் மருண்டன. முயல்கள் வேகமாக ஒடின.  அவள் இசைத்தால் குயில்கள் மருண்டன. ஆடினால் மயில்கள் வியந்தன. காமத்துப்பால் சிந்தாமல் சிதறாமல் பருகினார்.


அந்தி மந்தாரைப் பொழுதை துறவி(?) வெறுத்தார். அழகி கண் உறங்க ஆரம்பித்தால் பரிதவிப்பார்.

பர்ண சாலையை சுத்தம் செய்து, ஆடைகளை துப்புரவாக துவைத்து, சுவையாக ஆகாரங்கள் சமைத்து வாசல் தெளித்து, கோலம் போட்டு, அவளது திருப்பள்ளி எழுச்சிக்காக தவம் கிடப்பார். அழகி அவருக்கு பாடலும் கற்பிப்பாள். இருவரும் பாடுவதை கேட்டால் தேவகானம் தோற்றது. நாரத முனிவரே மெய் மறந்து லயத்தில் வயப்படுவார்.

காலம் பறந்தது. இரவு நேரம் துறவியை வதைக்க ஆரம்பித்தது. 

-தொடரும்.

-பார்த்தசாரதி

10 கருத்துகள்:

  1. அழகிய துறவியை நானும் தொடர்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  2. அச்சச்சோ... என்ன வரம் வாங்கினார்!

    பதிலளிநீக்கு
  3. சுவாரசியமாய் செல்கிறது....

    மாயை விரித்தவலையில் சிக்காதவருண்டோ!

    பதிலளிநீக்கு
  4. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

    - சாமானியன்
    saamaaniyan.blogspot.ftr

    எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  5. ‘அபாயம் தொடாதே’ என்று அறிவிக்கை இருந்தால் தொட்டுப்பார்ப்பது நமது வழக்கம். நமது துறவியும் அதுபோல் அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தியிருக்கமாட்டார்
    என எண்ணுகிறேன். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. வித்தியாசமான வரமாய் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  7. ஆஹா... அப்புறம் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.....

    பதிலளிநீக்கு
  8. //எதை வேண்டுமானாலும் இழக்கத்தயார். அவள் தான் என் உயிர் மூச்சு”//

    ஆஹா, இது மிக அருமையான ஆணித்தரமான பேச்சு.

    அப்புறம் கடைசியில் என்ன ஆச்சு ?

    ஆவலுடன் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. முதல் பாகம் படித்தாதிவிட்டது நாரதர் வருகை??!! கலகம்??!!! நன்மை??!! இதோ செல்கின்றொம் அதைப் படிக்க

    பதிலளிநீக்கு